அணுகப்படாதவர்களை அணுக... (Reaching the Unreached)

அணுகப்படாதவர்களை அணுக...
(Reaching the Unreached)
“இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு நாடு. சமத்துவம்ää சமதர்மம்ää சகோதரத்துவம் என்னும் அடிப்படைக் கூறுகளால் கட்டியமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைத் தன்னகத்தே கொண்டது. ‘எல்லாரும் ஓர் குலம்ää எல்லாரும் ஓர் இனம்ää எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்பது நம் நாட்டின் ஒற்றுமைக்கும் உயரிய மனப்பான்மைக்கும் கட்டியம் கூறும் காரணிகளுள் ஒன்று. ஆண்டான் - அடிமை என்றோää உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்றோää ஏழை - பணக்காரன் என்றோ நம்மில் வேறுபாடுகள் கிடையாது. சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்நாள் வரை சமத்துவம்ää சமத்துவம்ää சமத்துவம் மட்டும் தான் இந்தியாவின் தாரக மந்திரம். நம் எண்ணங்கள்ää திட்டங்கள் யாவும் இதையொட்டித்தான்”. ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தையும்ää குடியரசு தினத்தையும் கொண்டாடும் போது நம் நாட்டின் ஏதாவது ஒரு மூலை முடுக்கில் இந்த வார்த்தைகளை எவராவது ஒருவர் சொல்லிக் கொண்டு தான் இருப்பார். நாமும் பலவேளைகளில் இவற்றைக் கேட்டிருப்போம். கேட்டு இரசித்திருப்போம். இரசித்து வியந்திருப்போம். ஆனால் கடைசியில் அனைத்தையும் மறந்திருப்போம்.
இன்றைய இந்தியாவின் உண்மை நிலை இதுதானா? நம்மில் வேறுபாடுகளே கிடையாதா? குடியரசுத் தலைவர் முதல் குடியானவன் வரை எல்லாரையும் ஒன்றாகத்தான் நம் தேசம் பாவிக்கிறதா? இப்படியெல்லாம் என்றாவது கேட்டுப் பார்த்திருந்தால் தெரியும்ää இவை அனைத்துமே வெற்று வார்த்தைகள் மட்டும் தான் என்று. சுதந்திரம் பெற்று ஏறத்தாழ எழுபது ஆண்டுகளாகியும்ää இன்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும்ää பழகக்கூடாதவர்கள் என்றும் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் நாம் மக்களைப் பிரித்து வைத்திருக்கின்றோம் என்றால்ää நாம் எந்த அளவுக்கு நாகரிகமான மனிதர்கள் என்று நம்மையே நாம் கேள்வி கேட்டுப் பார்க்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.
இன்றைய இந்தியாவில்ää ஏறத்தாழ 4830 சாதிகளும்ää ஒவ்வொரு சாதிக்கும் 25ää000 உட்பிரிவுகளும் இருப்பதாக ஆய்வொன்று கூறுகின்றது. சாதி அடிப்படையில் எத்தனை மனிதர்கள் சாதாரணமான வாழ்க்கை முறையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது நம் எல்லாருக்குமே நன்றாகத் தெரியும். எத்தனை சாதிகளை தீண்டத்தகாத சாதிகள் என்று ஒதுக்கி வைத்திருக்கின்றோம் என்பதும் நமக்குத் தெளிவாகவே தெரியும். ஆனால்ää பெயரளவில் எல்லாரும் ஒன்று என சப்பைக் கட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இவையெல்லாம்ää நாம் மனித மாண்பை மறந்து மக்களைத் தீண்டத்தாதவர்களாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதன் வெளிப்பாடு தானே?
அதேவேளையில்ää இந்தப் பிரிவுகளும்ää பிளவுகளும் சாதி அடிப்படையில் மட்டும்தான் இருக்கின்றனவா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மதத்தின் பெயரால்ää இனத்தின் பெயரால்ää சூழலமைவின் பெயரால்ää பொருளாதாரத்தின் பெயரால்ää நாம் பல்வேறு மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிக் கொண்டே தான் இருக்கிறோம். இவ்வாறு பல்வேறு ரீதிகளில் ஒதுக்கப்பட்டää ஓரங்கட்டப்பட்ட இவர்கள் எல்லாரும் அணுகப்படாத நிலையில் (unreached) தானே இன்றும் இருக்கிறார்கள்? 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புää தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்ää கிறிஸ்துமஸ் அன்று தேசிய ஆளுமை தினத்தை நடுவண் அரசு கொண்டாட முடிவெடுத்ததைப் பற்றிய விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்ட இந்துத்துவ இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் இவ்வாறு சொன்னார்: “இரண்டரை கோடி கிறிஸ்தவர்கள் மட்டுமே இருக்கும் நம் நாட்டில்ää நடுவண் அரசின் இம்முடிவு எதிர்க்கப்படுவது தவறான ஓர் முன்னுதாரணம்”. சிறுபான்மையினராக இருப்பதால் கிறிஸ்தவர்களும்ää இசுலாமியர்களும் அடங்கித்தான் இருக்க வேண்டும் என்ற ரீதியிலான இப்பேச்சும்ää அயோத்தி பாபர் மசூதி இடிப்புää குஜராத் கலவரம் போன்ற நிகழ்வுகளும்; சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களைத் தீண்டத்தகாதவர்களாகத் தானே பார்க்கிறது! 
அம்பானியின் மனைவி என்ற ஒரே தகுதியால் ஒருவர் ஒலிம்பிக் குழுவின் முதல் பெண் உறுப்பினராக மாறியிருக்கும் நம் நாட்டில்ää ஏழை என்ற காரணத்திற்காகக் கண்டுகொள்ளாது விடப்பட்ட சாந்தி போன்ற வீராங்கனைகளின் நிலைää ஏழைகளை நாமும் நம் அரசாங்கமும் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கிறோம் என்பதைத் தானே எடுத்தியம்புகிறது!
காஷ்மீருக்காகக் குரல் கொடுத்து வரும் அறிவு ஜீவிகளும்ää அதிமேதாவிகளும் கச்சத்தீவு விவகாரத்தையும்ää ஈழத்தமிழர் இனப்படுகொலையையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்காத அவலநிலை தமிழர்களை இன்னும் தீண்டத்தகாதவர்களாகவே பாவித்துக் கொண்டிருக்கும் நடுவண் ஆட்சியாளர்களின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டத் தானே செய்கிறது! 
ஆனால்ää ஆட்சியாளர்களும்ää அரசியல்வாதிகளும் தான் இப்படி இருக்கின்றார்கள்@ நாம் நல்லவர்கள் தான் என்று நினைத்துக் கொள்வோமேயானால்ää நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம் என்பது தான் பொருள். என்றைக்காவது இந்த இழிநிலையை மாற்ற முன்வந்திருக்கிறோமா? அல்லது குறைந்த பட்சம் மாற்ற வேண்டும் என மனதளவிலாவது நினைத்திருக்கிறோமா? ஆயிரம் தான் இருந்தாலும்ää அவன் வேறுää நான் வேறு என்ற எண்ணம் எந்த அடிப்படையிலும் ஒருபோதும் எனக்கு வந்ததில்லை என்று நம்மில் ஒருவராவது மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல முடியுமா? ஒருவேளை அவ்வாறு சொல்ல முடிந்ததென்றால்ää நிச்சயம் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்ää நாம் சமத்துவ நாயகன் இயேசுவின் உண்மையான சீடர்கள்ää சமத்துவ இந்தியாவின் உண்மை உறுப்பினர்கள் என்று. 
நாம் பின்பற்றும் இயேசு தீண்டத்தகாதவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களைத் தேடிச் சென்றவர்;;. அணுகக் கூடாதää அணுகப்படாத நிலையில் இருந்த மக்களைத் தேடிச் சென்று அரவணைத்தவர். ஒதுக்கப்பட்டவர்களையும்ää விலக்கப்பட்டவர்களையும் ஓடிச்சென்று நலம் விசாரித்தவர். பாவிகளோடு பழகியவர்ää ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர்ää கைம்பெண்களின் நிலை கண்டு கலங்கியவர். இப்படிப்பட்ட குருவின் சீடர்களாக வாழ வேண்டிய நாம் உண்மையில் அவரது வழியில் அணுகப்படாதவர்களை அணுகிச் செல்லவும்ää குரலற்றவர்களின் குரலாக (voice of the voiceless) மாறவும் முன்வரும்போது நம் தலைவர் விரும்பிய சமத்துவää சமதர்மää சகோதரத்துவ இறையரசு விரைவில் இம்மண்ணில் மலரும் நாள் வெகுதொலைவில் இருக்கப்போவதில்லை.
சமத்துவக் கனவுகளுடன்ää
சகோ. க. செ. பிரவீன் ராசு.

Comments

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses

இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)