Important Bible Verses
- விவிலிய வசனங்கள் 1001.
- என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! – திபா 119:1052.
- மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வார். மத். 4:43.
- அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார். திபா 103:54.
- உன் இளமை கழுகின் இளமையென புதிதாய்ப் பொலிவுறும். திபா 103:55.
- தீயன செய்வோரே! என்னை விட்டு விலகுங்கள்; என் கடவுளின் கட்டளைகளை நான் கடைபிடிப்பேன். – திபா 119:1156.
- தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! -2 சாமு 7:287.
- ஆண்டவரின் வாக்கு நேர்மையானது. அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்குரியவை! - திபா 33:48.
- உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை! – திபா 119: 1039.
- அஞ்சாதே! நான் உன்னோடு இருக்கிறேன், கலங்காதே! நான் உன் கடவுள்! – எசா. 41: 1010.
- உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:1711.
- நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளோர். ஆற்றல்மிகு கடவுள் அவரே! - இச 7:2112.
- நம் கடவுள் நம்மோடு இருப்பார். நம்மைவிட்டு விலக மாட்டார். நம்மைக் கைவிடவும் மாட்டார். - இச 31:813.
- உம் கால் கல்லின் மேல் மோதாதபடி, ஆண்டவரின் தூதர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வர். - திபா. 91:1214.
- மலைகள் நிலைசாயினும், குன்றுகள் இடம்பெயரினும் உன்மீது நாங்கள் கொண்ட பேரன்போ நிலைசாயாது. – எசா 54:1115.
- என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே. – திபா 103:216.
- படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார். யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். - திபா 46: 1117.
- ஆண்டவர் உன் வாழ்நாளை நலன்களால நிறைவுறச் செய்கின்றார். – திபா 103:518.
- நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய்! - இச 28:619.
- ஆண்டவரே உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும். அவர்களுக்கு ஆசிர் வழங்கும். – திபா 28:920.
- ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன். – திபா 116:1221.
- நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். – திபா 111:122.
- கட்டுவோர் புறக்கனித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. - திபா 118:2223.
- பகைவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும். – திபா 31:424.
- எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே! - திபா 119:7125.
- ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும். தீமை செய்வோர்க்கு அது அழிவைத் தரும். – நீமொ 10:2926.
- கடவுளே நீரே என் ஆற்றல். திபா 43:227.
- கடவுள் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார். – எசா. 40:2928.
- ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. திபா 23:129.
- சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று! எத்துணை இனியது. - திபா 133:130.
- ஆண்டவரே நீரே என் மாட்சி! என்னைத் தலைநிமிரச் செய்பவரும் அவரே! – திபா 3:331.
- ஆண்டவரே நேர்மையாளருக்கு நீர் ஆசி வழங்குவீர். திபா 5:1232.
- உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்து நிற்க மாட்டீர்கள். எசா 7:933.
- கடவுள் தம் சிறகுகளால் நம்மை அரவணைப்பார். திபா. 91:434.
- ஆண்டவரே, நீரே என் கடவுள்; நான் உம்மை மேன்மைப்படுத்துவேன் எசா 25:135.
- உம்மைக் காக்கும் கடவுள் உறங்கிவிட மாட்டார். திபா 121:336.
- என் நெஞ்சே! நீ மீண்டும் அமைதி கொள். ஏனெனில் ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார். திபா 116:737.
- பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே! எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் இளைப்பாறுதல் தருவேன். மத். 11:2838.
- எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. தானி. 9:939.
- இதோ நான் இந்த மக்களுக்காக மீண்டும் வியத்தகு செயல் புரிவேன். எசா. 29:1440.
- உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம். மத். 4:741.
- ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும். அறிவும் உன் இதயத்திற்கு இன்பம் தரும். நீமொ 2:1042.
- ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம். நீமொ 9:1043.
- உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். மத். 5:4444.
- கடவுள் தம் விருப்பத்திற்கு ஏற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார். சஉ 2:2645.
- மற்ற மனிதர்கள் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மத். 6:1446.
- பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மத். 7:147.
- நோயற்றவருக்கு அல்ல; நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. மத் 9:1248.
- இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள். கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது. 1யோவான் 2:1449.
- நான் ஆண்டவருடைய ஆடையை தொட்டாலே போதும். நான் நலமடைவேன். மத். 9:2150.
- உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. சஉ 12:151.
- நல்ல அறிவுரை கேட்டு திட்டமிட்டால் வெற்றி பெறுவாய். நீமொ 20:1852.
- தமக்குத்தாமே நற்சான்று கொடுப்போர் அல்ல; மாறாக ஆண்டவரின் நற்சான்று பெற்றவரே ஏற்புடையவர் ஆவர். 2கொரி. 10:1853.
- சிறுபிள்ளையைப் போல தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர். மத். 18:454.
- நான் உங்களுக்குத் தந்தையாய் இருப்பேன்; நீங்கள் என் பிள்ளைகளாய் இருப்பீர்கள். 2கொரி. 6:1855.
- வறண்ட நிலமாகிய பாலைவெளியில் உன்னை அறிந்து ஆதரித்தவர் நானே. ஓசே 13:556.
- ஆண்டவரே தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும். மத். 20: 3157.
- மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை. குறைவாக சேகரித்தவருக்கும் எதுவும் குறைவு படவில்லை. 2கொரி. 8:1558.
- உதவி புரியவும் வீழ்ச்சியுறச் செய்யவும் கடவுளுக்கு ஆற்றல் உண்டு. 2குறிப்பேடு 25:859.
- பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை. திப 20:3560.
- விண்ணும் மண்ணும் ஒளிந்துபோகும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. மத். 24:3561.
- நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம். 1கொரி. 13:1062.
- சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோருக்கு நன்மையேதும் குறையாது. திபா 34:1063.
- உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும். யாக். 1:564.
- உங்கள் கை உங்களை பாவத்தில் விழச்செய்தால் அதனை வெட்டி வீழ்த்திடுங்கள். மாற் 9:4365.
- மாட்சியும் புகழ்ச்சியும் கடவுளின் திருமுன் உள்ளன. ஆற்றலும் அக்களிப்பும் அவரது திருத்தலத்தில் உள்ளன. 1குறி. 16:2766.
- மன உறுதியுடன் செயல்படுங்கள்;;;;;;;;;: நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார். 2குறி. 19:1167.
- தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. யோவான் 15:368.
- உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே! சஉ 12:169.
- நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரியத் தீர்ப்பை கடவுள் வழங்குவார் என்பதை மறவாதே! சஉ 11:970.
- வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். யோவான் 1:1471.
- கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும். நீமொ 3:3372.
- சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. மத். 19:1473.
- இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர். நீமொ 11:1774.
- உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர். யோபு 3:2475.
- உண்மை பேசுவோர் நீதியை நிலைநாட்டுவர். நீமொ 12:1776. பொன்னை விட ஞானத்தை பெறுவதே மேல். நீமொ. 16:1677.
- மண் முகத்தே மழையைப் பொழிபவரும் வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே. யோபு 5:1078.
- தீங்கு உமக்கு நேரிடாது. வாதை உன் கூடாரத்தை நெருங்காது. திபா. 91:1079.
- நான் விரும்புகிறேன் உமது நோய் நீங்குக! மாற்கு 1:4180.
- நீங்கள் தீமை எதுவும் செய்யாதிருக்க உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம். 2கொரி. 13: 781.
- நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன். மாற்கு 2:1782.
- கடவுளோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுவீர்கள். கொலே. 2:1083.
- கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார். மாற்கு 3:3584.
- உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன். மத். 28:2085.
- உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள். மத். 5:4886.
- நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன். மாற்கு. 5: 2887.
- உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று. மத் 9:2288.
- ஆண்டவரே உனக்கு என்றுமுள்ள ஒளியாக இருப்பார். எசா. 60: 2089. உன் கண்ணீரின் நாட்கள் ஒழிந்து போகும். எசா 60:2090.
- என் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன் எசா. 54:8 91.
- என் அன்பார்ந்த மைந்தர் இவரே! இவருக்கு செவிசாயுங்கள். மாற். 9:792.
- விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். திபா. 121:293.
- ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர். லூக்கா. 1:4594.
- மகளே! உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. லூக். 8:4895.
- நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். நீதியை நாடித் தேடுங்கள். எசா. 1:1796.
- இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர். லூக். 11:2897.
- அஞ்சாதீர்! நம்பிக்கையோடு மட்டும் இரும். லூக். 8:5098.
- இதோ நான் வருகிறேன். வந்து உன் நடுவில் குடிகொள்வேன். செக். 3:1099.
- கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல். லூக். 6:29100.
- எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது இறைவனிடம் மன்றாடுங்கள். 1தெச. 5:16
Comments
Post a Comment