சுதந்திரம் பெற்றுவிட்டோமா?
சுதந்திரம் பெற்றுவிட்டோமா?
(சில சிதறிய சிந்தனைகள்)
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமேää ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” என்று பாடினான் பாட்டுக்கொரு புலவன்.
“1947 ஆகஸ்டு 15 ஒரு கறுப்பு நாள்” என்றார் தமிழர் தந்தை பெரியார்.
எது உண்மை? ஏன் இந்த சிந்தனைகள்?
உண்மையில் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்று விட்டதா?
“சமத்துவää சகோதரத்துவ...” என்னும் வார்த்தைகள் இன்றைய தேதி வரை அரசியலமைப்புச் சட்டத்தில் மட்டும்தான் இருக்கிறதே தவிரää மக்கள் உள்ளத்தில் இல்லை. இதுதான் சுதந்திரமா?
“தங்க நகைகள் அணிந்த பெண் இரவில் தனியாய் வரவேண்டும்” என்றார் காந்தி. பகலில் கூட வரமுடியாத அளவுக்கு பாலியல் வன்கொடுமைகள். இதுதான் சுதந்திரமா?
அறுபத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகும் வறுமை ஒழியவில்லைää ஏற்றத்தாழ்வுகள் அகலவில்லை. இதுதான் சுதந்திரமா?
மதவாத பேதத்தால் மாடுகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை கூட இன்று மனிதர்களுக்கு இல்லை. இதுதான் சுதந்திரமா?
மதவெறி பிடித்தவர் பிரதமராகவும்ää அதிகாரவெறி பிடித்தவர் முதல்வராகவும் வரும் நிலையில் தான் இன்று நம் தேசம் இருக்கிறது. இதுதான் சுதந்திரமா?
சுதந்திரதினத்தைக் கொண்டாடக்கூட ஏழடுக்குää எட்டடுக்குப் பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன. இதுதான் சுதந்திரமா?
தகுதிக்கு இல்லாத மரியாதை தராதரத்திற்குக் கொடுக்கப்படுகிறது. அம்பானியின் மனைவி என்ற ஒரே தகுதி ஒருவரை ஒலிம்பிக் குழுவின் முதல் பெண் உறுப்பினராக மாற்றியிருக்கின்றது. இதுதான் சுதந்திரமா?
பதினெட்டு மொழிகள் தேசிய மொழிகளாக இருந்தும்ää இந்தி நிர்வாக மொழியாகவும்ää சமஸ்கிருதம் பாடமொழியாகவும் ஆட்சியாளர்களால் வருந்தித் திணிக்கப்படுகின்றன. இதுதான் சுதந்திரமா?
‘லஞ்சம் வாங்காதவர்’ என்ற ஒரே காரணம் ஆட்சியாளர் சகாயம் 25 முறை பணிமாற்றம் செய்யப்படக் போதுமாயிருக்கிறது. இதுதான் சுதந்திரமா?
‘உண்மையை உரக்கச் சொன்னார்’ என்ற ஒரே காரணத்திற்காகää மைக்கேல்-டி-குன்ஹாவின் தீர்ப்புக்கு நேர் எதிர் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது. இதுதான் சுதந்திரமா?
சிந்திப்போம்... உண்மைச் சுதந்திரம் பெறும் நாளுக்காய் உழைப்போம்.
சுதந்திர தாகத்துடன்ää
க. செ. பிரவீன் ராசு.
Comments
Post a Comment