Posts

பாஸ்கா காலம் - நான்காம் ஞாயிறு

Image
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் என்பவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 39 வயதாகும் இவர்தான் இன்றைய உலகில் மிகஇளைய வயதில் ஒருநாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர், மிகப்பெரிய சர்வாதிகாரி. இவருடைய அப்பா, தாத்தா இருவருமே தென்கொரியாவின் அதிபர்களாக இருந்தவர்கள். இவர்களது வரிசையில் 30 வயதில் ஆட்சிக்கு வந்த இவரும் அவர்களைப் போலவே தன்னை ஒரு பெரிய சர்வாதிகாரியாகக் காட்டிக்கொண்டவர். தன்னை எதிர்த்து நாட்டில் யாருமே பேசக்கூடாது என்ற எண்ணம் கொண்டவ இவர், அதிபரைத் தவறாகப் பேசிய குற்றத்திற்காக மட்டுமே ஏறத்தாழ 12 இலட்சம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தென்கொரிய நாட்டில் எல்லாத் துறைகளிலும் உள்ள உயரிய விருதுகள், பட்டங்கள் அனைத்தையும் தனக்குத்தானே ஒரேநாளில் கொடுத்துக் கொண்டவர். அந்தநாட்டின் இராணுவ அமைச்சருக்கு அதிபர் பேசிக்கொண்டிருக்கும் ஒருகூட்டத்தில் தூங்கியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஒருமுறை புயல்காற்றின்போது அதிபரின் புகைப்படம் காற்றில் பறந்தது. அப்போது ஒருபெண் தன்குழந்தைகளைப் புயலிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தார். அதிபரின் புகைப்படத்தைப் புயலிலிருந்து க

பாஸ்கா காலம் - மூன்றாம் ஞாயிறு

Image
  நற்செய்தி நூல்களைப் புரட்டிப் பார்த்தால் இயேசுவின் வாழ்வில் பயணங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நம்மால் உணர முடியும். அவரது பிறபபு முதல் விண்ணேற்றம் வரை அவரது வாழ்வில் அவர் மேற்கொண்ட பயணங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. தாயின் வயிற்றில் அவர் கருவாக இருந்தபோதே நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு மேற்கொண்ட முதல் பயணத்தில்தான் அவரது மண்ணக வாழ்வின் தொடக்கமே ஆரம்பித்தது. சீடர்கள் அனைவரும் கூடியிருக்க, அவர்களது கண்கள் முன்பாக மண்ணகத்திலிருந்து விண்ணகத்தை நோக்கிப் பயணித்த அவரது விண்ணேற்றம்தான் மண்ணக வாழ்வில் அவரது இறுதிப் பயணம். கலிலேயா, யூதேயா, சமாரியா, எருசலேம், கப்பர்நாகூம் என தன் வாழ்வு முழுவதும் எத்தனையோ இடங்களுக்குப் பயணித்துக் கொண்டேயிருந்தார் இயேசு. ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொருவிதமான பாடத்தை மக்களுக்கும் சீடர்களுக்கும் கற்றுத்தந்துகொண்டே இருந்தார்.  இன்றைய நற்செய்தியும் இயேசுவின் ஒரு பயணத்தைப் பற்றித்தான் பேசுகின்றது. இஸ்ரயேல் மக்களின் அரசியல், சமூக, ஆன்மீகத் தலைநகரான எருசலேமிலிருந்து பதினொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள எம்மாவு என்ற இடத்திற்கு இரண்டு சீடர்களோடு இயேசு மேற்கொண்

பாஸ்கா காலம் - இரண்டாம் ஞாயிறு

Image
இன்று இறைஇரக்கத்தின் பெருவிழா. நம் வாழ்வு முழுவதும் தனது அளவற்ற பேரன்பாலும் எல்லையற்ற இரக்கத்தாலும் நம்மை நிரப்பிவரும் இறைவனை நன்றியோடு நினைவுகூர்கின்ற நாள். இயேசுவின் உயிர்ப்பே இரக்கத்தின் அடையாளம்தான். இறப்புக்குப் பின்னும் இறைவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்குமாறு மறுவாழ்வு ஒன்று உண்டு என்பதை நாம்வாழத் தன்னை பலியாக்கிய இயேசு உலகிற்கு உணர்த்திய நாள்.  இன்றைய நற்செய்தியில் தன் உயிர்ப்பிற்குப் பிறகு தன் சீடர்களுக்குத் தோன்றும் இயேசு மூன்று பரிசுகளைத் தருவதைப் பார்க்கிறோம். முதல் பரிசு அமைதி (வா.19). கலகக்காரன் யாரை நமது வழியாக வழிகாட்டியாக ஏற்று வாழ்ந்தோமோ அந்தத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இனி நமது வாழ்வு என்னவாகும், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்களா? இனி எப்படி இந்த சமூகத்தில் வாழப்போகிறோம்? என்று ஏகப்பட்ட மனக்குழப்பத்தில் சிக்கித் தவித்த சீடர்களுக்கு இயேசு தந்த முதல் பரிசு இது. இரண்டாவது பரிசு தூய ஆவியார் (வா.22). மக்களைக் குழப்புகிறவன் என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டு இயேசு தண்டிக்கப்பட்டிருக்கிறார். நாமும் அவரோடு மூன்றாண்டுகள் பயணித்திருக்கிறோம். இதுதெரிந்தால் நம்மையும் ஏதாவத

பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!! (A reading of the Book of Ruth in the Bible)

அது சாலமோன் அரசன் தாவீதுக்குப் பிறகு இஸ்ரயேல் மக்களை ஆண்டு கொண்டிருந்த காலம். யூதர்கள் தங்களைத் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதி பிற இனத்தவரைப் புழுவென மதித்த காலம். தாங்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய மக்களினம் என்றும், தங்களோடு வாழும் ஏனைய இனத்தார் யாருமே கடவுளுக்கு ஏற்றவர்களல்ல என்றும் எண்ணிக் கொண்டிருந்த காலம். இஸ்ரயேல் மக்களிலும் கூட பெண்கள் ஆண்களை விட மதிப்பில் குறைந்தவர்கள் என்று சித்தரிக்கப்பட்ட காலம். இந்தக்காலத்தில் தான் இஸ்ரயேல் மக்களுக்குத் தங்கள் திருச்சட்டத்தையும் மூதாதையர் வரலாற்றையும் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இறைவனும் மனிதனும் இணைந்து ஆசிரியர்களாகச் செயல்பட்டாலும் கூட, அக்கால மக்களின் ஆணாதிக்கச் சிந்தனைகள் இத்திருநூல்களிலும் இழையோட ஆரம்பித்தன.  பெண்களுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் எதுவும் மருந்துக்குக் கூட இல்லாத இந்தக் காலக்கட்டத்தில் தான் திருவிவிலியம் எழுதப்பட்டது என்றாலும் கூட, அரிதிலும் அரிதாக ஒருசில பெண்கள் அக்காலத்தவரால் சிறந்தவர்கள் எனக் கருதப்பட்டதும், அவர்களின் திருநூல்களில் தங்களுக்கென்று தனிச்சிறப்பான இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட

தனிநபர் வழிபாடும் தள்ளாடும் தமிழ்நாடும் (Hero Worship in Tamil Nadu Politics)

இந்திய, குறிப்பாக தமிழக அரசியலில் தனிநபர் வழிபாட்டிற்கு எப்போதும் பெரும் இடமுண்டு. ஆள்பவன் என்றாலே ஆண்டவன் என்று நினைக்கும் மனநிலை நம் மக்களின் பொதுப்புத்தியில் நங்கூரமிட்டு உட்கார்ந்திருக்கிறது. அது அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, திரைத்துறை, அரசுத்துறை என எல்லா இடங்களிலும் பரந்து விரிந்திருக்கின்றது என்றாலும், அரசியல் தளத்தில் அதன் ஆழமும் அகலமும் சற்றே அதிகம் தான். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திற்கு முன்பே இச்சீரழிவு இருக்கின்றது என்பது கசப்பான உண்மை. மன்னர் காலத்தில் மன்னர்களைப் பாடுவது, போற்றுவது, வழிபடுவது என்றிருந்த நிலை முடியாட்சி ஒழிந்து குடியாட்சி பிறந்த பிறகும் ஒழியவில்லை.  பூம்புகார் படத்திலே ஒரு வசனம் வரும். தன் கணவன் கோவலன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்கும் கண்ணகி பாண்டிய மன்னனைக் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கும் அதிகாரம் அவனுக்கு இல்லை என்றும் வாதிடுகிறாள். பின்னர் அமர்ந்திருக்கும் சான்றோர் பெருமக்களிடம் தன் வழக்கை எடுத்துரைக்கும் கண்ணகி, தன் வாதத்தின் இறுதியில் சொல்லும் வார்த்தைகள் அவை: “ஆன்றோர்களே, அருமைமிகு அளப்பரிய படை கொண்டவன் பாண்டியன் என்பதற

ஜனநாயகம் விற்பனைக்கு! (Democracy for Sales)

இந்தியாவின் அரசியல் வரலாற்றில் தலைவர்களின் பெருமையையும், அவர்களது கட்சிகளின் தன்மைகளையும் தியாகம், தன்னலமில்லா உழைப்பு, மக்கள் பணி போன்ற அளவுகோல்களைக் கொண்டு கணக்கிட்ட காலம் மலையேறி விட்டது. இன்று அரசியல்வாதிகள் என்றாலே அவர்களின் மதிப்பை பணபலமும், அவர்கள் சார்ந்துள்ள சாதிபலமும், வைத்திருக்கம் அடியாள் பலமும், வகிக்கும் பதவிபலமும் தான் முடிவு செய்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றேன், நாட்டிற்கு நல்லது செய்தேன், மக்களுக்காகப் போராடினேன், சிறை சென்றேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு யாரும் அரசியலில் இன்று நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் மக்களின் வரவேற்பு இருக்காது. ஒருவேளை மக்களின் ஆதரவு இருந்தாலும் ஆகப்பெரும் கட்சிகளோடும், பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த, சாணக்கியத்தனமிக்க அரசியல்வாதிகளோடு போராடி, தேர்தலிலோ, அரசியலிலோ வெற்றி பெற முடியாது. இதுதான் இன்றைய இந்தியாவின் எழுதப்படாத விதி. பணம், பணம், பணம் தான், பணம் மட்டும் தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சியாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை இந்திய அளவில் பிரபலமாக்கியவர் முன்னா

எனக்கு அரசியல் தேவையா? (Do I need Politics?)

கிராமப்புறங்களில் அமைந்துள்ள தெருவோர தேநீர்க்கடைகளில் இவ்வாறு எழுதிப் போட்டிருப்பாhகள்: இங்கு அரசியல் பேசாதீர்! இந்த அறிவிப்புப் பலகையைப் பார்க்கும் எனக்கு நிச்சயம் வியப்பும் ஆச்சரியமும் ஏற்படும். இன்று அரசியல் பேசாமல் இருக்க முடியுமா? அரசியல். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனோடும், குழுமத்தோடும், சமூகத்தோடும் இரண்டறக் கலந்து விட்ட ஒரு சொல். இன்றைய எதார்த்த உலகில் இது இல்லாமல் எதுவும் இல்லை என்னும் பட்டத்தை ஏதேனும் ஒன்றிற்குக் கொடுக்க வேண்டுமென்றால் அதை அரசியலுக்குக் கொடுக்கலாம். அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்ற முதுமொழிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு இன்று முன்னுக்கு வந்து முதன்மையாக நிற்பது இந்த அரசியல் தான். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு மனிதன் செய்யும் அனைத்து செயல்களிலும் அரசியல் இருக்கின்றது. அவன் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் அரசியல் இருக்கின்றது. முன்னரே சொன்னது போல, அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. யாரும் இல்லை.  இது ஒருபக்கம் இருப்பினும், பல நேரங்களில் பலர் என்னைப் பார்த்து உனக்கு அரசியல் தேவையா என்ற கேள்வியை எழுப்பும் போதெல்லாம் எனக்கும் இப்படித்தா