இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)

இளமை - இது சாதிக்கும் பருவம்
        “ஏண்டா, வயசும் ஏறிக்கிட்டே போகுது, இன்னும் உனக்கு ஒரு பொறுப்பு வரலையே. ஒழுங்கா ஒரு வேலைக்குப் போகலாமில்ல” அங்கலாய்க்கும் பெற்றோர்கள் பலருக்கும் அவர்களது மகன்கள் சொல்லும் வார்த்தை இது தான். “ஏன் இப்படி தொணத் தொணன்னு கத்திக்கிட்டிருக்கீங்க? எனக்கென்ன அப்படியா வயசாயிடுச்சி? இந்த வயசு என்ஜாய் பண்ணுற வயசு. இப்ப போயி சம்பாத்தியம், சம்பளம்னுகிட்டு…” வெட்டிப் பேச்சி பேசி, குட்டிச்சுவராக மாறுவதை மட்டுமே தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்ட இவர்களில் பலருக்கு பல நேரங்களில் மறந்து விடுகின்றது. சாதிப்பதற்கு வயது தடையல்ல என்று.
    பதின்பருவமாக (வுநநn-யபந) இருந்தாலும் சரி, இளம்பருவமாக (லுழரவாhழழன) இருந்தாலும் சரி, சாதிப்பதற்கு ஏற்ற வயதுதான் என்பதை நமது இளைஞர்கள் பலர் புரிந்து கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் இளமை மட்டும் தான் சாதிப்பதற்குச் சரியான வயது என்பதுதான் உலக வரலாறு உரக்கச் சொல்லும் பாடம். “இளங்கன்று பயமறியாது” என்ற முதுமொழிக்கேற்ப எதையும் வேகத்தோடும், வீரத்தோடும், ஆர்வத்தோடும், புதுமையோடும் எதிர்கொள்ளும் வயது இதுதான். இன்று உலகில் ஒப்பற்ற தலைவர்களாக போற்றப்படும் பலரும் தங்களது இளமையில் தான் கொண்ட கொள்கைக்கு உருக்கொடுக்க, உயிர் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத, மறக்க முடியாத உண்மை. அப்படிச் சாதித்த ஒருசிலரை சந்திக்க, சரித்திர ஏடுகளைப் புரட்டுவோம். வாருங்கள்!!!.
    அந்தப் பையனுக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான் அறிமுகமானது கணினி. மாதந்தோறும் அப்பா தருகிற 15 ரூபாயை வைத்து இண்டர்நெட் சென்டரில் நேரத்தைக் கழிக்க முடியாது. யோசிக்கிறான். மதிய உணவு இடைவேளையிலும், மாலை நேரத்திலும் நான் கடையைப் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு சம்பளம் வேண்டாம். தினமும் 1 மணி நேரம் இன்டர்நெட் இலவசமாகக் கொடுங்கள். தன் பள்ளிக்கு அருகில் உள்ள இன்டர்நெட் சென்டர் உரிமையாரிடம் இவ்வாறு சொன்னான். அவருக்கும் டீல் ஓகே. இலவசமாகக் கிடைத்த இன்டர்நெட்டில் கண்டதையும் பார்த்து வீணடிக்காமல், இணையதளம் எவ்வாறு வடிவமைப்பது என கற்றுக் கொள்கிறேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அமெரிக்காவில் உள்ள சிறிய நிறுவனம் ஒன்றிற்கு இணையதளம் வடிவமைதத்துக் கொடுக்கிறான். முதல் சம்பளம் 100 டாலர். அதை வைத்து றறற.உழழழடாiனெரளவயn.உழஅ என தனக்கென ஒரு இணைதளத்தை வடிவமைத்து, தன்னை விளம்பரப்படுத்துகிறான். வாய்ப்புகள் வரத் தொடங்குகின்றன. 13 வயதில் தன் சொந்தப் பணதத்தில் கணினி வாங்குகிறான். 18 வயது நிரம்பினால் மட்டுமே இந்தியாவில் தனது பெயரில் நிறுவனம் ஆரம்பிக்க முடியும். 14 வயதில் அமெரிக்காவில் நண்பரின் உதவியோடு குளோபஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தைப் போல தனது நிறுவனத்தை வளர்க்க வேண்டும் என்ற கனவுகளோடு, இந்தியாவில் இருந்தபடியே பிஸினஸ் செய்கிறார். ஒருமுறை ஸ்பெயின் நிறுவனத்திடம் பிஸினஸ் பேசும் போது, ஸ்பானிஷ் மொழி தெரியாததால், ஆர்டர் கிடைக்காமல் போக, மறுநாளே ஸ்பெயினில் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு, தனது நிறுவனத்தின் பகுதி நேரப் பணியாளர்களாக வேலைக்கு அமர்த்துகிறார். 18 வயதில் இந்தியாவில் தன் நிறுவத்தைப் பதிவு செய்கிறார். என்ஜீனியரிங் முதலாமாண்டு பயிலும் இவரை இன்று எம்.பி.ஏ. கல்லூரிகள் பல சிறப்புரையாற்ற அழைக்கின்றன. தனது 19 வயதில் சுவிட்சர்லாந்து நாட்டில் தனது நிறுவனத்தின் கிளையைத் தொடங்குகிறார். இன்று ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல நாடுகளில் இவரது நிறுவத்திற்குக் கிளைகள். தற்போது 25 வயதைத் தொடும் இந்த இளைஞர் பெங்களுரைச் சேர்ந்த சுகாஸ் கோபிநாத்.
    அந்தப் பையனது குடும்பத்தில் வறுமை கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. காலை எழுந்தவுடன் வேலை, பகல் பிறந்தவுடன் பள்ளி, மாலை முழுவதும் உழைப்பு இப்படித்தான் கழிந்தது அவனது வாழ்க்கையில் பெரும் பகுதி. இந்த நிலையில் தான் அந்தக் கோரச் சம்பவம் நடந்தது. காலையில் மகனைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வேலைக்குச் சென்ற அவனது தாய் மதியமே வீடு வந்து சேர்ந்தாள் பிணமாக. ஆம், சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் சம்பவ இடத்திலேயே அவளது உயிர் உடலை விட்டுச் சென்றிருந்தது. பிறக்கும் போதே தந்தையை இழந்த அவனுக்கு தாயின் இழப்பு ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. தனது அத்தை வீட்டில் வாழ ஆரம்பித்தான். ஆனால், விதி அவனை விரட்டியது. குணப்படுத்த முடியாத தோல் நோய் ஒன்றினால் படுத்த படுக்கையானாள் அவனது அத்தை, கைகூப்பி மருத்துவர்களை வேண்டினான். அவர்களோ கைவிரித்து விட்டனர் முடியாதென்று. விளைவு, விரும்பிய மருத்துவப் பிரிவில் சேர இயலாமல் வணிகவியல் பயில ஆரம்பித்தான். ஆனால், அவனது மருத்துவக் கனவு நீர்த்துப் போய்விடவில்லை. விடுமுறைக் காலங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பழைய புத்தகங்களை இரவல் வாங்கிப்படித்தான். அவனது ஆசை கனவானது. கனவு வெறியாக மாறியது. 19 வயதில் பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மூலிகைகளைக் கொண்டு தோல் நோய்களைக் குணப்படுத்தும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தான். படுத்கையில் கிடந்த தன் அத்தையைக் குணப்படுத்தினான். 2011ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இம்மருந்து 2013ல் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினர். அதன்பிறகு தனது கண்டுபிடிப்புக்கென காப்புரிமையும் பெற்று விட்டான். இன்று உலகில் ஓர் இளம் கண்டுபிடிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த இளைஞன் ஸக்கி லத்தீப்.
    மேலே குறிப்பிட்டுள்ள இவர்களைப் போலவே எண்ணிக்கையில்லாத பலர் தங்களின் இளமைப் பருவத்தை சாதிக்கும் பருவமாகப் பயன்படுத்துவதில் வெற்றி பெற்றுதான் இருக்கிறார்கள். இன்றும் வரலாற்றின் புத்தகங்களில் தங்கள் பெயர்களைப் பொறித்துக் கொண்டவர்கள் பலருக்கு ஏதோ ஒரு வகையில் அவர்களது இளமைப்பருவம் தான் காரணியாக அமைந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆம் நண்பர்களே!
õ  இன்று உலகமே வியக்கும் மட்டைப்பந்து வீரர் சச்சின் டென்டுல்கர் தன் முதல் சாதனையை நிகழ்த்திய போது அவருக்கு வயது 17.
õ  உலக்கோப்பையை வென்று, சாதனை மன்னனாக உலா வந்த கபில்தேவ் சாதனை படைத்த போது அவருக்கு வயது 26.
õ  முடியாது என்று பலரும் ஒதுங்கிய ஆங்கிலக் கால்வாயை குற்றாலீசுவரன் நீந்திக் கடந்தபோது அவருக்கு வயது 12.
õ  நம்மை அடிமை விலங்கிட்டு ஆட்டிப்படைத்த ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து துரத்தியபோது தீரன் சின்னமலைக்கு வயது 25.
õ  மறத்தமிழ் வீரத்துடன் ஆங்கிலேயரை தன் முன் மண்டியிடச் செய்தபோது வீரபாண்டியகட்டபொம்மனுக்கு வயது 31.
õ  பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்தாட்ட வீரர் பிரௌனின் அனைத்து சாதனைகளையும் முறியடித்த போது அமெரிக்காவின் சிம்சனுக்கு வயது 29.
õ  பரங்கியரின் பாராளுமன்றத்தில் குண்டுவீசி பகைவர்களை பயமுறுத்தியபோது பகத்சிங்கிற்கு வயது 23.
õ  பாட்டுக்கொரு புலவனாக பாரத நாடே பறைசாற்றியபோது பாரதிக்கு வயது 39.
õ  உலகப்புகழ் பெற்ற கவிதைகளை எழுதும் போது ஆங்கிலக் கவிஞர் கீpட்ஸ்-க்கு வயது 24.
õ  வருடம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணுமளவிற்கு அம்பானி சகோதரர்கள் உயர்ந்த போது அவர்களுக்கு வயது 32.
õ  உலக் கோடீஸ்வரராக உன்னதப் புகழ் பெற்ற போது பில்கேட்ஸ்-க்கு வயது 35
õ  இனியும் வெற்றி கொள்ள நாடு இருக்கிறதா? என தேடிய போது அலெக்ஸாண்டருக்கு வயது 32.
õ  உலகக் கார் பந்தய வீரராக கோவையைச் சார்ந்த நரேன் கார்த்திகேயன் பிரகாசித்த போது அவருக்கு வயது 18.
õ  உலகின் சதுரங்க ஜாம்பவானாக உருவெடுத்த போது நம் விஸ்வநாதன் ஆனந்திற்கு வயது 16.
õ  துள்ளிக் குதித்து ஓங்கி அடித்து டென்னிஸ் விளையாட்டில் புகழ் பெற்ற போத விஜய் அமிர்தராஜ்-க்கு வயது 21.
õ  தனியாக விமானம் ஓட்டி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த போது உடுமலை கீதா பிரியாவிற்கு வயது 18.
    இன்னும் இன்னும் எத்தனையோ பேர் தங்கள் இளமைப் பருவத்தை சாதிக்கும் பருவமாக மாற்றிடும் போது இளைஞனே உன்னால் மட்டும் ஏன் முடியாது? சரித்திரமென்னும் சிலையைச் செதுக்க சரியான வயது இதுதான். தேவைப்டுவதெல்லாம் இதயத்திற்குள் இலக்கு ஒன்று மட்டுமே. நோக்கம் ஒன்றைக் கைக்கொண்டு அதை நோக்கிப் பயணித்தால் வெற்றி நிச்சயம்.
நோக்கம் இருக்கும் வாழ்க்கையில் ஆக்கம் இருக்கும்!
ஆசை இருப்பவனது இதயத்தில் ஓசை இருக்கும்!
எண்ணம் இருப்பவனது வாழ்வில் பல வண்ணம் இருக்கும்!
துணிவு இருக்கும் வாழ்வில் தூக்கம் இராது!
தெளிவு இருக்கும் வாழ்வில் குழப்பம் இராது!
நோக்கம் இருப்பவனது வாழ்வில் ஏக்கம் இராது!
அன்பு இளைஞர்களே!
    புறப்படுவோம் புயலென! சகதியில் சிக்கிய சமுதாயத்திற்கு சக்தி கொடுப்போம்! சாக்கடைகளை எல்லாம் மணம் வீசும் சந்தனப் பூக்கூடைகளாக மாற்றுவோம்!
ஏனெனில், இப்போது நமக்கிருக்கும் இளமைப் பருவம்

         இதுதான் சாதிக்கும் பருவம்.

Comments

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses