காக்கும் பூமியைக் காப்போம் (Save the Earth)

காக்கும் பூமியைக் காப்போம்
(புவியைப் பாதுகாப்போம்)
தொடக்கமாக…
              “இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி
               இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”
- என்று மனவேதனையுடன் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். உலகின் ஒருசில நாடுகளில் நிலவிய சாதிக்கொடுமையையேச் சகிக்க முடியாமல் பாரதிதாசன் இப்படிப் பாடிய போது, இன்று உலகம் முழுவதும் தவறென்று தெரிந்தும் தயங்காமல் நிகழ்த்தப்படும் இயற்கை அழிப்பைக் கண்ணுறும் போதெல்லாம் இப்படித்தான் வெகுண்டெழுந்து பாடத் தோன்றுகின்றது.
               “இருட்டறையில் உள்ளதடா உலகம் - காக்கும்
                இயற்கையை அழிப்பவனும் இருக்கின்றானே”
- ஆம். இயற்கையின் துணையின்றி நம்மால் இயல்வது ஒன்றுமில்லை என்பதை அறிந்தும் கூட, வாழும் புவியை வரைமுறையின்றி நாசம் செய்வது நமக்கு வாடிக்கையான செயலாகவே மாறிவிட்டது. ஆனால், புவியையும் புவியிலுள்ள அனைத்தையும் சீரழிப்பதை விட்டு, சீர்படுத்த முற்படும்போது தான் நாம் நமக்கும், நமக்குப் பின்வரும் சந்ததிக்கும் நல்லதைச் செய்பவர்களாக இருப்போம். இதை உணர்த்துவதும், அவ்வாறு பாதுகாக்க வழிமுறைகளைப் பரிந்துரைப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
புவி – அது என்ன?
     நாம் வாழும் இப்புவி, பால்வெளி அண்டத்தில் உள்ள சூரியக் குடும்பத்தைச் சார்ந்த மிக முக்கியக் கோள்களுள் ஒன்றாகும். இன்றைய நாள் வரையிலான ஆராய்ச்சி முடிவுகளின்படி, சூரியக் குடும்பத்தில் உயிரினங்கள் தோன்றி வாழக்கூடிய அனைத்துத் தகவமைப்புகளையும் கொண்ட ஒரே கோள் புவி மட்டுமே. எனவேதான், சூரியக்குடும்பத்தின் மையம் புவியே எனப் பண்டைய கால மக்கள் கருதுமளவிற்கு ‘புவி’ முக்கியத்துவம் பெற்றிருந்தது. என்னதான் ஆராய்ச்சிகள் இன்று புவி என்பது சூரியனை மையமாக, தலைமையாகக் கொண்ட சூரியக் குடும்பத்தின் ஓர் உறுப்புக்கோள் மட்டுமே என நிரூபித்தாலும், சூரியன் (சூரியக்கடவுள்) ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கையோடு முடங்கிவிட்டார். ஆனால் புவியோ (பூமித்தாய்) உலக மக்கள் அனைவராலும் முக்கியத்துவம் பெற்றவளாகத்தான் கருதப்படுகிறாள்.
     இந்த புவி என்பது என்ன என்பதை நாம் ஆராய முற்பட்டால், பன்னெடுங்காலத்திற்கு முன்பு, சூரியனிலிருந்து பிரிந்து வந்த ஒரு மிகப்பெரிய வாயு வளையமே என்பது தான் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பு. ஏறத்தாழ 4500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்தேறியது. நாட்கள் செல்லச் செல்ல, இவ்வாயு வளையத்தின் வெப்பம் சிறிது சிறிதாகத் தணிந்து குளிர ஆரம்பித்தது. இவ்வாறு உயிரினங்கள் வாழத் தகுந்த முறையில் தன்னையே தகவமைத்துக் கொண்டது.ஜ1ஸ
     தற்போதைய நிலவரப்படி, புவி 510 மில்லியன் ச.கி.மீ. பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கோளாகும். இதில் 29மூ, அதாவது 153 மில்லியன் ச.கி.மீ நிலமாகவும், மீதிப்பகுதியான 71மூ நீராகவும் அமைந்தள்ளது.ஜ2ஸ 4600 கோடி ஆண்டுகள் வயது கொண்ட, வினாடி ஒன்றிற்கு 18.5 மைல் (29.8கி.மீ) வேகத்தில் சூரியனைச் சுற்றி வரும் புவி, ஒருமுறை தன்னைச் சுற்ற 23 மணி, 56 நிமிடம், 4 வினாடி காலமும் சூரியனைச் சுற்ற 365.25 நாட்களும் எடுத்துக் கொள்கின்றது. “புவியின் ஒரே இயற்கைத் துணைக்கோளான சந்திரன் (நிலவு) 2,38,860 மைல் (3,84,400 கி.மீ.) தொலைவில் புவியைச் சுற்றி வருகின்றது.ஜ3ஸ
இவ்வாறு பல்வேறு தனிச்சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட புவி மட்டுமே, சூரியக்குடும்பத்தில் மனிதர்களும், உயிரினங்களும் வாழத் தகுதி பெற்ற ஒரே கோள் என்பது தான் தற்போது வரையிலான அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஏகோபித்த முடிவு ஆகும். என்னதான் வேற்றுக் கிரகவாசிகள் (யுடநைளெ) பற்றிய மர்மம் இன்றுவரை முடிச்சவிழ்க்கப்படாமல் இருப்பினும், மனிதர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இந்தப் புவியில் மட்டுமே. பிரபஞ்சத்தின் (ருniஎநசளந) பகுதியில் இலட்சத்தின் ஒரு பங்;கு அளவிற்கு புவி இருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். எனில், இப்புவியின் அதிமிகு முக்கியத்துவம் எப்படிப்பட்டது என்பதை நாம் உணர வேண்டும்.
புவியின் கூறுகள்
     அடிப்படையில், புவி என்பது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பே ஆகும். பலவேளைகளில் நிலம் மட்டுமே புவி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் புவியில் இவ்வைம்பெரும் பூதங்களின் தடயங்களும், செயல்பாடுகளும் அதிகமாகவே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, நிலம், மற்றும் நீர் ஆகிய இரும்பெரும் கூறுகளால் உருவானதே புவி. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், இத்தடயங்களாலும், செயல்பாடுகளாலும்தான் இன்று புவி இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆக, இவ்வைந்து காரணிகளும் எப்போது சரிவரச் செயல்படுகின்றனவோ, அப்போதுதான் புவியின் இயக்கமும் சரிவர அமையும். இப்பஞ்ச பூதங்கள், இப்புவியிலுள்ள பல்வேறு உயிரினங்களைப் போல, இன்றோ, நேற்றோ தோன்றியவை அல்ல. மாறாக, புவி பிறக்கும் போதே இவையும் பிறந்தன. புவி இருக்கும் வரை இவையும் இருக்கும். 4500 ஆண்டுகளுக்கு முன்பு புவி இப்பிரபஞ்சத்தின் தனி உறுப்பாக உருவெடுத்த போது, எந்த ஒரு உயிரினமும் அதில் இல்லை, ஆனால், மீத்தேன், கார்பன்-டை ஆக்ஸைட், அம்மோனியா, நீர் ஆகியவை மட்டுமே இருந்தன, கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.ஜ4ஸ 
     மொத்தத்தில் இயற்கைக் கூறுகளை மட்டுமே உள்ளடக்கியது நாம் வாழும் புவி. ஆனால், காலப்போக்கில் மனிதனின் வியத்தகு அறிவியல் கண்டுபிடிப்புகளால் செயற்கையையும் ஒரு கூறாக எடுத்துக் கொள்ளும் அபாயத்திற்கு இன்று புவி தள்ளப்பட்டுள்ளது. கோள்களும், விண்மீன்களும் நிறைந்திருந்த அண்டப்பரப்பை, செயற்கைக் கோள்களும், விண்கலங்களும் ஆக்கிரமிக்கத் தொடங்கின. பறவைகள் மகிழ்ந்திருந்த வான்வெளியில் வானூர்திகளும், ஆகாய விமானங்களும் போட்டி போட்டுக் கொண்டு பறக்கத் தொடங்கின. பச்சைப் பசேலென்று மரங்கள் செழித்திருந்த நிலப்பரப்பில், விண்ணை முட்டும் கட்டடங்கள்  முளைத்தன. பவளப்பாறைகளும், பலவகை விலங்குகளும் நிறைந்திருந்த நீர்ப்பகுதியில், கால்வாய்களும், கப்பல்களும் இடம்பிடித்தன. இதன் விளைவுதான் இன்று நாம் அனுபவிக்கும் சீரழிந்த நிலையிலுள்ள புவி.
ஆதிமனிதனும் புவியும்;;:
     தற்காலமும், முற்காலமும் உருவாகும் முன் கற்காலம் இருந்தவரை புவி சீரான நிலையில்தான் இயங்கிக் கொண்டிருந்தது. புவியில் தோன்றிய ஆதிமனிதன் புவியையும், அதில் நிறைந்திருந்த இயற்கை வளங்களையும் நேசித்தான். இயற்கையோடு இணைந்த, இயைந்த வாழ்வாக தன் வாழ்வை அமைத்துக் கொண்டான். செயற்கைக் கலப்பு சிறிதும் இன்றி, முழுக்க முழுக்;க இயற்கை முறையில்தான் சிந்தித்தான்; செல்பட்டான்; வாழ்ந்தான். இயற்கையையும் ஆதிமனிதனையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு அவனது செயல்பாடுக்கும் வாழ்வு முறைகளும் அமைந்திருந்தன.
     ஆதிமனிதன் புவியில் விளைந்த காய்களையும் புவியில் வாழ்ந்த விலங்குகள் மற்றும் பறவைகளையும் உணவாக உட்கொண்டான்; இயற்கை எழில் கொஞ்சும் காடுகளின் நடுவே மரநிழல்களையும் கூடாரங்களையும் தன் இருப்பிடமாக்கிக் கொண்டான்; இலை, தழைகளையும், விலங்குகளின் தோல்களையும் தன் உடையாக மாற்றிக் கொண்டான்; தன் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடும் போது கூட, இயற்கைக் கற்களும், விலங்குகளின் எலும்புகளும் தான் அவனது ஆயுதங்களாக அமைந்தன. இவ்வாறு, எங்கும், எதிலும் இயற்கை, இயற்கை, இயற்கையைத் தவிர வேறொன்றும் அறியாத மனநிலையோடு வாழ்ந்தவர்கள்தாம் ஆதி மனிதர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்த்தப்பட்ட சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட ஹரப்பா, மொகஞ்சதாரோ தடயங்களும், கல்வெட்டுக்களும் இவ்வுண்மைக்கு இன்றளவும் சான்று பகர்கின்றன.
புவியின் இன்றைய நிலை:
     இவ்வாறு, ஆதி மனிதனால் பொன்போல் பொதிந்துப் பாதுக்காக்கப்பட்ட புவி, இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை சற்றே ஆராய்ந்து பார்க்கின், வேதனையும் துயரமுமே விஞ்சுகின்றன. “மாற்றம் ஒன்றே என்றும் மாறாத ஒன்று” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், நம் வாழ்க்கையில் மட்டுமன்றி, புவியிலும் கூட பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விட்டோம். காடுகள் இருந்த இடத்தில், மரங்களை அழித்து கட்டடங்களைக் கட்டுவதன் மூலமும், நீர் இருந்த இடத்தில, மணலைக் கொட்டி செயற்கைத் தீவுகளை அமைப்பதன் மூலமும், புவியின் அடிப்படை முறையைக் கூட மாற்றத் துணிந்து விட்டோம். ஆனால், மாற்றம் என்பது சில வேளைகளில் விரும்பத்தக்கதே எனினும், பல நேரங்களில் புவிக்கும், மனித வாழ்விற்கும் ஊறு விளைவிக்கும் எனில், அது பேராபத்திற்கான பதற்றத்தையே விளைவிக்கும் என்பது தான் உண்மை.ஜ5ஸ இந்த உண்மையை நாம் உணராத காரணத்தினால் தான், இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் நாம் வாழும் புவியை நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம். புவியின் அடிப்படைக் கூறுகளாகவும், காரணிகளாகவும் இருக்கும் பஞ்சபூதங்களைப் பாழாக்குவதன் மூலம் நம்மையே பாழாக்கிக் கொண்டிருக்கின்றோம். மொத்தத்தில், அவசரச் சிகிச்சை தேவைப்படும் நோயாளியின் நிலையில் இன்று புவி இருக்கின்றது. புவியின் இன்றைய நிலையை ஒரே வரியில் சொல்வதானால் இவ்வாறுதான் சொல்ல முடியும், அந்த அளவிற்கு மோசமான நிலையில் தான் நமது புவி உள்ளது.
     இனி, புவியின் இத்தகு இழி நிலைக்குக் காரணம் என்ன என்பதை ஆராய முற்படுவோம்.
நில மாசுபாடு:
      “அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
         இகழ்வார்ப் பொறுத்தல் தலை”.
-என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தின் பெருமையை நானிலமெங்கும் பறைசாற்றினார் வள்ளுவர். நிலவுலகில் மனிதர் வாழ இன்றியமையாதது நிலம். இன்றைய உலகின் மொத்த நிலப்பரப்பில் 11மூ  பயிரிடும் நிலமாகவும், 24மூ  மேய்ச்சல் நிலமாகவும், 31மூ  காடுகள், மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியாகவும், 34மூ  கட்டடப்பகுதிகள் மற்றும் பயனற்ற நிலமாகவும் உள்ளது.ஜ6ஸ ஆனால் இன்றைய காலச் சூழலில் இந்நிலப் பரப்பானது சரியான முறையில் கையாளப்படுகின்றதா என்றால், அது மிகப் பெரிய கேள்விக்குறியாக அமையும். எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு நிலத்தை மாசுபடுத்துவதை அன்றாடக் கடமையாக நாம் இன்று மாற்றிக் கொண்டோம்.
நிலம் மாசுபடுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது காடுகள் அழிப்பு. காடுகள் அழிப்பு என்பது ஏதோ அடர்ந்த  கானகப் பகுதியினை வெட்டிச் சாய்ப்பது மட்டுமல்ல; சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக மரங்கள் வெட்டுவதையும் இது உள்ளடக்கும், என்னதான் ஒருபுறம் மரம் நடுவிழா போன்றவை  பெயருக்காக நடைப்பெற்றுக் கொண்டிருந்தாலும், மறுபுறம் தொழிற்ச்சாலைகளுக்காக பல்வேறு மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆண்டுதோறும் புத்தாண்டு வாழ்த்து அட்டை தயாரிப்பதற்காக மட்டும் ஏறத்தாழ 15 இலட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. உலகில் வெட்டப்படும் மரங்களில் 12மூ சிகரெட் தயாரிப்புக்காக வெட்டப்படுகின்றன.
இவை தவிர நவீன இரசாயன முறைகளுக்காக பல்வேற நச்சுக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதும் நிலச் சீரழிவிற்கு முக்கியக் காரணமாகின்றது. மேலும், எளிதில் மக்கிப் போகாத பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களும் கழிவுகளாக நிலத்தில் கொட்டப்பட்டு, நிலத்தை நாசமாக்குகின்றன. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிடுவதால், ஆண்டுக்கு ஒரு இலட்சம் மீன்கள் இறந்தன. இதன் காரணமாக அங்கு பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.ஜ7ஸ
   இவ்வாறாக, மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவனைச் சுமக்கும் தாயாக இருக்கும் நிலம், மனிதனாலேயே நாசமாக்கப்பட்டு வருகின்றது என்பது வேதனைக்குரிய, அதே வேளையில், மறுக்கவியலாத உண்மை. இக்கொடுமைகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு எஞ்சியிருக்கும் நிலப்பரப்பில் கூட மணற்கொள்ளை, மணற்கடத்தல் என நிலவளம் சுரண்டப்படுகின்றது. ஒரு கன அடி மணல் உருவாக 100 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் மிக எளிதாக மணல் அள்ளி, இயற்கை வளத்தைச் சுரண்டுவதால் நிலத்தடி நீரின்றி, விவசாயம் செய்ய வழியின்றி, உணவுத் தட்டுப்பாடும் ஏற்படுகின்றது.ஜ8ஸ ஆனால், நுனிக்கிளையில் அமர்ந்து மரம் வெட்டுவது வெட்டுபவனுக்கே ஆபத்தை ஏற்படுத்துவது போல, நாம் நிற்கும் நிலத்தை நாசம் செய்வதன் மூலம் நமக்கு நாமே; குழிதோண்டிக் கொண்டிருக்கின்றோம்.
நீர் மாசுபாடு:
நிலத்தைப் போலவே, புவியின் மற்றொரு மிகப்பெரும் அடிப்படைக் கூறுதான் நீர். மனிதனின் வாழ்வில் நீர் எனும் முக்கியப் பொருளின்றி எதுவும் நடக்காது. உலகில் வாழும் அனைத்து வகை உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பது நீர்தான். இதனை உணர்த்தவே,
          “நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
            வானின்று அமையாது ஒழுக்கு”
-என்ற அழகிய குறட்பா திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. மனிதகுல வரலாற்றில் புகழ் பெற்றதாக நம்மால் அடையாளம் காணப்பட்டுள்ள சிந்து சமவெளி நாகரிகம், யூப்ரடிஸ் நாகரிகம், மெசபடோமிய – சுமேரிய நாகரிகம் போன்றவையெல்லாம் நீர்க்கரையோரங்களில் தான் தோன்றி வளர்ந்திருக்கின்றன.ஜ9ஸ இவ்வளவு ஏன், மனித உடலில் கூட, இரத்தத்தில் 83 விழுக்காடும், எழும்பில் 22 விழுக்காடும், தோளில் 70 விழுக்காடும் நீர் உள்ளது. இத்தகைய தனிச்சிறப்பு மிக்க நீர் இன்று மனித குலத்தினால் எந்த அளவிற்கு மாசுப்படுத்தப்படுகிறது என்பதை கண்ணுறும் போதெல்லாம், முகத்தில் மட்டுமின்றி, அகத்திலும் இரத்தக் கண்ணீர் வடிகின்றது.
      உலகில் இருக்கும் நீர்ப்பகுதியில் 1மூ மட்டுமே நன்னீராகும், ஆனால், இந்நீர் இன்று தொழிற்சாலைக் கழிவுகளால் படும் பாட்டினை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், அனுமின் நிலையங்கள் போன்றவற்றின் கழிவுகளால் நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்தான் நீரை மாசுபடுத்துகின்றது என்று நாம் நம்பிகொண்டிருந்தால் நமது கணிப்பும், கணக்கும் தவறாகவே அமையும். நம் வீடுகள் மற்றும் உணவகங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாக்கடையாய்த் தேங்கி, நீர் மாசுபாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றது. சென்னையின் பெருமையென நாம் கொண்டாடும் கூவம் இதற்கு சிறந்த சான்று.
      ஒருபுறம் நீர் மாசுட்டினால் மக்கள் துன்பப்படும் போது, மறுபுறம் பணக்கார நாடுகளின் மக்கள் தண்ணீரை அதிகளவு வீணாக்கி வருகின்றனர். மொசாம்பிக், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 லிட்டர் நீர் மட்டுமே பயன்படுத்த, இங்கிலாந்திலோ ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 160 லிட்டர் தண்ணீர் பயனபடுத்துவதாகவும், இதன் காரணமாக ஏழை நாடுகளில் அசுத்தமான நீர் அருந்த நேரிட்டு, நாளொன்றுக்கு 4000 பேர் இறப்பதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.ஜ10ஸ வெளிநாடுகளில் தான் இந்நிலை என்றால் நமது பாரதத் திருநாட்டில் கூட, பாசனத்திற்காகப் பயன்படுத்தப்படும் 14 விழுக்காட்டைத் தவிர, மீதிப்படுதி ஆற்று நீர் பெருமளவு வீணாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
      இந்நிலை இன்னும் தொடர்ந்தால், பால் விலை உயர்வுக்கு போராட்டங்கள் நடத்துவதைப் போல, தண்ணீர் விலை உயர்வுக்காகவும் போராட்டங்கள் நடத்தும் காலம் விரைவில் வரும்.
இதுவும் புவி அழிப்பே:
     நாம் முன்பே கூறியது போல, புவி என்பது பஞ்சபூதங்களான நிலத்தையும் நீரையும் சிறப்புக் கூறுகளாகக் கொண்டிருந்தாலும், அது சரிவர இயங்க பிற பஞ்சபூதங்களின் துணையும் தேவை. எனவே, நாம் காற்றையும், ஆகாயத்தையும் மாசுபடுத்தும்போதும் புவி அழிப்பிற்குத்தான் துணை போகின்றோம்.
     மனிதன் உயிர்வாழத் தேவையான அடிப்படைகளுள் ஒன்று காற்று. உணவு உண்ணாமலும், குடிநீர் அருந்தாமலும் குறைந்தபட்சம் ஒருவாரமேதும் உயிர் வாழ மனிதனால் முடியும். ஆனால், காற்றைச் சுவாசிக்காமல் ஒருமணி நேரம் கூட உயிர் வாழ முடியாது. ஒரு மனிதர் சாரசரியாக நாளொன்றுக்கு 26,000 முறை மூச்சு இழுக்கிறார். இவ்வாறு, மூச்சிழுப்பதன் மூலம் 14 கிலோகிராம் ஆகிஸிஜனை அவர் எடுத்துக் கொள்கிறார்.ஜ11ஸ ஆனால், இத்தகு காற்றையும் நாம் விட்டுவைக்கவில்லை. நாளுக்கு நாள் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் புகை, வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை, அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியிடப்படும் நிலக்கரிச் சாம்பல், துணி ஆலைகள் போன்றவற்றிலிருந்து வெளியிடப்படும் பஞசுத்தூசு போன்றவற்றால் இன்று வளிமண்டலமே தன் வனப்பை இழந்து விட்டது.
      இது மட்டுமின்றி, கரியமில வாயு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் மூலமாகவும், பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் பயன்பாட்டலும் புவி வெப்பமடைந்து வருவது கவலைக்குரிய செய்தியே. இதனால் பல பனிமலைச் சிகரங்கள் உருகி, கடல் நீர்மட்டம் உயர்ந்து, மனிதகுலம் பாதிப்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது நாம் எந்த அளவிற்கு புவியை அழித்து, அதன் மூலம் நம்மையே அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு தெளிவான சாட்சியம். நமது இத்தகு செயல்பாடுகள் அனைத்துமே நாம் புவியை அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதைத் தெளிவாக எடுத்தியம்புகின்றன.
     மொத்தத்தில் இன்றைய எதார்த்த உலகில மனிதன் உடனடிப்பயன் மற்றும் உற்பத்தி தருபவற்றைத் தவிர, மற்றவற்றில் இயற்கையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டான்.ஜ12ஸ உணவு (குயளவ குழழன) முதல் உடை (சுநயனஅயனந) வரை உடனடிப் பயனை நோக்கி ஓடிக்கொண்ருக்கின்றோமே தவிர, காலங்காலமாய் நம்மைக் காத்து வந்த புவியை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.   


புவிச் சீர்கேட்;டின் விளைவு:
      “அகழ்வாரை தாங்கும் நிலம்” எனப் பொறுமைக்கு இலக்கணமாய்ப் புவியைத்தான் கூறினான், பொய்யாமொழிப்புலவன். அதே வேளையில், “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்னும் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இன்று புவியின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நாம் உணர வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். தான் படைத்த மனிதர்களால் தானே நாசமாக்கப்பட்டு, இயல்பு நிலையை இழந்து என்ன செய்வதென்று தெரியாமல், தத்தளித்துத் தடுமாறம் நிலையில் உள்ளது நம் தாய்ப்புவி. எங்கு நோக்கினும் நில அதிர்வு, புயல் சீற்றம், எரிமலைக் குமுறல், வெள்ளப் பெருக்கு, வரலாறு காணாத வறட்சி என உலகமே உடைந்து போய்க் கொண்டிருக்கின்றன. இத்தகு அபாயங்கள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் நாம் புவியை அழித்துக் கொண்டிருப்பதே தவிர, வேறொன்றுமில்லை.
      ஒரு வேளை, புவி சீர்ப்பட்டால் என்ன, சீர்கெட்டால் என்ன, நமக்கென்ன என்ற இருந்தோமெனில் நம்மைப் போல அடிமுட்டாள்கள் யாருமில்லை. சுவரில் எறியப்பட்ட பந்து திரும்பி வருவது போல, நாம் புவிக்குச் செய்த கொடுமைகள் யாவும் நம்மைத்தான் கடுமையாகத் தாக்கி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில், நம் ஆசியக் கண்டத்தில் நிகழ்ந்த இறப்புகளில் 75 விழுக்காடு இறப்புகள் இயற்கை பேரழிவுகளால் நிகழ்ந்துள்ளன.ஜ13ஸ
      உலகம் அதிகமாக வெப்பமடைந்து பல்வேறு பாதிப்புகள் புவிக்கு ஏற்படத் தொடங்கியுள்ளன. பல்வேறு குளிர்பிரதேசங்கள் உருக ஆரம்பித்து விட்டன. கடல்நீர் சூடேறியுள்ளதால் சூறாவளிகள் பெருகியுள்ளன. ஒருசில சூழ்நிலைகள் மட்டுமே வாழும் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வரும் உயிரினங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அவ்வளவு ஏன், இன்று நுகர்வுக் கலாச்சாரம் உச்சத்தை அடைந்து, சுரண்டல், சுயநலம், பேராசை ஆகியவை அதிகரித்தும், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமநிலை மாறி பாகுபாடுகள் ஏற்பட்டதும் கூட இப்புவிச் சீர்கேட்டின் வெகுமதிகளே.
      மொத்தத்தில், மாதம் மும்மாரி பொழிந்து, குயில்களும் குருவிகளும் பறந்து, எங்கும் எழில்கொஞ்சும் பசுமையோடு இயற்கை பூத்துக் குலுங்கிய காலம் போய், தன் இயல்பை முழுவதுமாக இழந்து விட்ட பட்டமரமாகவே நம் புவி மாறிவிட்டது என்பது தான் வேதனையிலும் வேதனை.
புவிப்பாதுகாப்பு – நம் கடமை: 
      20 மில்லியன் ஆண்டுகள் வயது கொண்ட இப்புவியில், 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிர்கள் தோன்றத் தொடங்கின, ஆனால் உயிரினங்கள் அனைத்திலும் இளைய (துரnழைச) மனித இனம் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தான் தோன்றியுள்ளது. 70,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புகள்தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதத் தடயங்களுள் பழமையானது.ஜ14ஸ ஆனால் மனிதருக்கும் புவிக்கும் இடையிலான உறவுநிலை ஆழமானது; பொருள் பொதிந்தது. ஏனெனில், மற்ற உயிரினங்களைப் போலல்லாமல், தனக்கேற்ப சூழலையும், சூழலுக்கேற்ப தன்னையும் மாற்றிக் கொள்ளும் ஆற்றல் மனிதனிடம் மட்டுமே உள்ளது.
      புவியின் தூசியினால் தான் மனிதன் உருவாக்கப்பட்டான். (தொநூ 2:7); அவன் சுவாசிக்கும் காற்றும், அருந்தும் தண்ணீரும் இப்புவியின் உடைமைகளே.ஜ15ஸ மட்டுமன்றி, மற்ற உயிரினங்களைப் போல புவியால் ஆளப்படாமல், புவியை ஆள அதிகாரம் பெற்றவர்களும் மனிதர்களாகிய நாம் மட்டுமே. ஒருவேளை, புவிக்கெதிரான செயல்களில் ஈடுபட்டாலும் கூட அதை உய்ததுணர இயலாத மற்ற உயிரினங்களுக்கு மத்தியில், செய்த தவறைச் சரி செய்ய, பகுத்தறிவு பெற்றவர்கள் நாம். எனவே, புவியைப் பாதுகாப்பது மனிதர்களாகிய நம்மைப் பொறுத்தவரை அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட. துன்பத்தால் துவண்டுபோய், கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் தாயின் கண்ணீரைத் துடைக்க பெற்றமகன் எவ்வளவு அவசரப்படுவானோ, அதே அளவிற்கு, அழிந்து கொண்டிருக்கும் புவியை மீட்பதும் நமது கடமை எனக் கருத வேண்டும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்:
      நாம் வாழும் புவியை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உலகமெங்கும் இன்று பல்வேறு செயல்திட்டங்கள் பரவலாக்கப்பட்டு வருகின்றன, இவ்வனைத்தும் முயற்சிகளையும் உலகளாவிய முறையில் தொடங்கி வைத்து நம் இந்தியா தான். முதன் முதலில்,1972-ஆம் ஆண்டு ஜீன் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் ஸ்டாக்ஹோம் (ளுவசழம ர்ழஅந) என்னுமிடத்தில புவிப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. ஆனால் இதில் இரண்டே நாட்டுத் தலைவர்கள் (இந்திரா காந்தி, ஆலோப் பாமே) மட்டுமே கலந்து கொண்டனர்.ஜ16ஸ
      அதன்பின், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1992- ஆம் ஆண்டில் ரியோ-டி-ஜெனிரோ என்னுமிடத்தில் முதல் புவி உச்சி மாநாடு கூட்டப்பட்டது. “புவியை அழிவிலிருந்து காப்பதில் அனைத்து உயிரினங்களை விட அதிக அக்கறை கொள்ள வேண்டியவர்கள் மனிதர்களே” என்று உலகம் முழுமைக்கும் இம்மாநாடு அறைகூவல் விடுத்தது.ஜ17ஸ
      இதன்பின், 1957-இல் உலகச் சுகாதார அமைப்பு (றுர்ழு)  காற்று மண்டலச் சீர்கேடு பற்றி ஆராய்ந்தது. 1958-இல் மிலான் கருத்தரங்கு, காற்று மண்டலச் சீர்கேட்டின் அபாயங்கள் குறித்து விவாதித்தது. 1959-இல் இலண்டனில் காற்றுத் தூய்மை பற்றிய மற்றொரு மாநாடு நடைபெற்றது. 1979-இல் மிலான் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில, சுற்றுச் சூழல் பற்றிய உலகளாவிய ஒருங்கினைப்பு முயற்சிகள் தொடங்கப்பட்டன. 1997-ஆம் ஆண்டு ஜீன் மாதம் 23 முதல் 27 வரையுள்ள நாட்களில் ஐக்கிய நாடுகள் அவையின் (ருNழு) சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சிக் கழகம் (ருNநுP) சார்பில மற்றொரு உலகளாவிய மாநாடு நடைபெற்றது.
      இவ்வாறு பல்வேறு மாநாடுகள் கூட்டப்பட்டு, திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட, இவற்றில் பல திட்டங்கள் இன்றளவும் கோப்புகளோடு முடக்கப்பட்டுவிட்டன. எனவே, இனியும் மாநாடுகள் நடத்துவதை விட, ஒவ்வாரு தனி மனிதனும் தன்னாலானதைச் செய்ய முற்படும் போது மட்டுமே நம்மால் புவியைப் பாதுகாக்க முடியும்.

நமது செயல்திட்டங்கள்:
     முதலில் நம் புவியானது தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ள வல்லது. நாம் உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே, புவி தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளும், நாம் பயன்படுத்தாத நிலங்களிலெல்லாம் பல்வகை செடிகளும், மரங்களும் தாமாகவே உருவாவதைப்போல. அந்த அளவிற்கு தன்னைத் தானே மீட்டுக்கொள்ளும் ஆற்றல் படைத்தது புவி. அதே வேளையில், ‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்’ என்ற முதுமோழிக்கேற்ப புவிப்பாதுகாப்பு வழிகளில் நாமும் அடியெடுத்து வைக்க வேண்டும். இன்றைய சூழலிருந்து புவியை அதன் இயல்புத் தன்மைக்கு இட்டுச் செல்ல மிகச் சிறந்த வழிதான் மாற்றுக் கலாச்சாரம் (ஊழரவெநச ஊரடவரசந). இதுவரை புவியை அழிப்பதையே கலாச்சாரமாகக் கொண்டிருந்த நாம் அதற்கு மாற்றாக சில மாற்று வழிகளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும்.
     மாற்றுக் கலாச்சாரம் என்பது அழித்தலுக்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுப்பதைக் குறிக்கும். “ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரங்களை நட வேண்டும்” என்னும் திரு. ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களின் கருத்தும் இது போன்றதே. எனவே, அழித்தலை விடுத்து ஆக்கப்பணிகளை மேற்கொள்ள ஒருசில பரிந்துரைகள்:
எ  நிலத்தைச் சீரழிக்கும், எளிதில் மட்கிப்போகாத பிளாஸ்டிக் மற்றும் நெகிழிப் பைகளுக்கு (Pழடலவாநநெ) மாற்றாக துணிப் பைகளைப் பயன்படுத்தலாம்.
எ  அதிகளவில் தண்ணீரை வீணாக்குவதற்கு மாற்றாக, தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்தலாம்.
எ  மணற்கொள்ளை போன்ற தேசத்துரோக செயல்களை எதிர்த்து திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் வழியில் மக்கள் இயக்கங்களாகப் போராடலாம்.
எ  தொழிற்சாலைக் கழிவுகள் ஆறு மற்றும் கடல்களில் கலக்காமல் இருக்க மாற்று ஏற்பாடகளைச் செய்யலாம்.
எ  உண்ணும் உணவு முதல் பயன்படுத்தும் பொருட்கள் வரை அனைத்திலும் செயற்கையை விட்டொழித்து, அதற்கு மாற்றாக இயற்கைக்கு முக்கியத்துவம் தரலாம்.
எ  நமது வாழ்நாளில், நாம் வாழும் பகுதியில் குறைந்தபட்சம் பத்து மரங்களாவது நட்டுப் பராமரிக்கலாம்.
எ  கிறித்துஸ், தீபாவளி, இரம்ஜான் போன்ற பண்டிகை நாட்களில், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் பட்டாசுகளுக்குப் பதிலாக, மரக்கன்று நடதல் போன்றவற்றைச் செயல்படுத்தலாம்.
(பி.கு.: எம் கிறிஸ்து இல்லத்தில் இவ்வாண்டு தீபாவளியின் போது பட்டாசுவெடிப்பதற்குப் பதிலாக, மரக்கன்றுகள் நடப்பட்டன.)
எ  வேளாண்மைத் தொழிலில் செயற்கை இரசாயன உரங்களுக்கு மாற்றாக, இயற்கை உரங்களைப் பயன்படுத்தலாம்.
எ  நம் கல்வித் திட்டங்களில் சுற்றுச் சூழல், புவிவெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வுகளை ஏட்டளவோடு நிறுத்திக்கொள்ளாமல், செயல்முறைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
எ  காகிதங்கள், பாட்டில்கள், அட்டைகள், அலுமினியம் போன்ற உலோகங்களை தூர எறியாமல் மறுபயன்பாட்டிற்குப் (மறுசுழற்சி) பயன்படத்தலாம்.
எ  அதிகளவில் புகைவிடும் வாகனங்களைத் தவிர்த்து மிதிவண்டி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
எ  புகைபிடித்தலைத் தவிர்த்தல், சாண எரிவாயுக் கலன் அமைத்தல், காலணி அணியாது நடத்தல் போன்ற செயல்பாடுகளைத் தனிமனித அளவில் செயல்படுத்த முயலலாம்.
எ  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் புவி, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விழாக்களைப் பொருளுணர்ந்த விதத்தில் கொண்டாடலாம்.
எ  நாம் வாழும் இடங்களில் குப்பைக் கூளங்கள், கழிவு நீர்த் தேங்கல்கள் ஆகியவை இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
எ  வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைத்துத் தண்ணீரைச் சேமிக்கலாம்.
     இவ்வாறு, நம் கண்முன்னே நம்மால் செய்ய முடிந்த பல்வேறு செயல்பாடுகள் உள்ளன. இவற்றில், ஒவ்வொரு தனிமனிதனும் ஒருசிலவற்றைச் செயல்படுத்தத் தொடங்கினாலே, அழிவுப்பாதையிலிருந்து நம் புவி மீட்டெடுக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
நிறைவாக…
      ஒவ்வொரு மனிதனும் தாய் மடியில் இருந்த தருணங்கள் மிகச்சொற்பமே. அதுபோல தாய் அவனைக் கருணையால் சுமந்து நாட்களும் மிகச் சொற்பமே. ஆனால் மனிதன் அதிகம் இருந்தது புவியின் மடியில் தான். அதுபோல் அவனை கருவரை முதல் கல்லறை வரை சுமந்து கொண்டிருப்பதும் புவிதான். எனவே, நம் வாழ்வில் புவியின் முக்கியத்துவத்தை நாம் உணர்வதே புவிப்பாதுகாப்பில் நாம் ஆற்றும் கடமையின் முதற்படி ஆகும். ஆனால், இவ்வாறு உணர்ந்து கொள்வதோடு நமது கடமை முற்றுப் பெறக் கூடாது. புவிப்பாதுகாப்பு நமத கடமை என்பதை என்னும் போதே, இயற்கை உலகிற்கும் எதிராக நாம் இழைக்கும் குற்றம், நமக்கெதிராகவும் கடவளுக்கெதிராகவும் நாமே இழைக்கும் குற்றம் என்பதை உணர வேண்டும்.ஜ18ஸ அதன் பின்னர், பாழ்பட்டுள்ள இயற்கையைப் பண்படுத்த நம்மாலான முயற்சிகளை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், நம்மைக் காக்கும் புவியை நாமும் காக்கலாம்.  
               






                 

Comments

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses

இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)