அன்பின் மகிழ்வை அதிகமாக்குவோம்!
அன்பின் மகிழ்வை அதிகமாக்குவோம்! மனிதன் ஒரு சமூக விலங்கு. பிற விலங்குகளைப் போலன்றி, மனிதன் என்பவன் எப்போதும் குழுமமாகவும், சமூகமாகவும் கூடி வாழும் இயல்பினை உடையவன். எனவே தான், விலங்குகளின் கூட்டத்தையோ அல்லது இனத்தையோ சமூகம் என்று அழைக்காத நாம், மனிதர்களின் கூட்டத்தை அல்லது குழுமத்தை மட்டும் சமூகம் என்றே அடையாளம் காண்கின்றோம். இப்படிப்பட்ட மனித சமூகங்கள் அனைத்துமே சிறு சிறு சமூகங்களின் ஒன்றிணைப்பே. இத்தகு சிறு சமூகங்களுள் முதன்மையான, முகாமையான, இன்றியமையாத கூறு யாதெனில், அது ஒரு குடும்பமாக மட்டுமே இருக்க முடியும். இந்த மாபெரும் உண்மையை உணர்ந்து தான், நமது கத்தோலிக்கத் திருச்சபை “குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை” எனப் பெருமிதம் பொங்கக் கூறுகின்றது. இவ்வாறு சமூகங்கள் அனைத்திற்கும் அடிப்படைக் கூறுகளாகத் திகழ வேண்டிய குடும்பங்களின் இன்றைய நிலை கவலைக்குரியதாகவே உள்ளது. குடும்பம் என்ற உன்னத அமைப்பின் அடையாளம் இன்றைய யதார்த்த உலகத்தைப் பொறுத்தமட்டில் முழுக்க முழுக்க பொருளிழந்து விட்டது என்பது தான் மறுக்கவியலாத உண்மை. எனவே, இன்றைய காலக்கட்டத்தில், சமுதாயத்தைச் சீர்படுத்த விரும்பும் எந்த