ஜனநாயகம் விற்பனைக்கு! (Democracy for Sales)
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் தலைவர்களின் பெருமையையும், அவர்களது கட்சிகளின் தன்மைகளையும் தியாகம், தன்னலமில்லா உழைப்பு, மக்கள் பணி போன்ற அளவுகோல்களைக் கொண்டு கணக்கிட்ட காலம் மலையேறி விட்டது. இன்று அரசியல்வாதிகள் என்றாலே அவர்களின் மதிப்பை பணபலமும், அவர்கள் சார்ந்துள்ள சாதிபலமும், வைத்திருக்கம் அடியாள் பலமும், வகிக்கும் பதவிபலமும் தான் முடிவு செய்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றேன், நாட்டிற்கு நல்லது செய்தேன், மக்களுக்காகப் போராடினேன், சிறை சென்றேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு யாரும் அரசியலில் இன்று நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் மக்களின் வரவேற்பு இருக்காது. ஒருவேளை மக்களின் ஆதரவு இருந்தாலும் ஆகப்பெரும் கட்சிகளோடும், பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த, சாணக்கியத்தனமிக்க அரசியல்வாதிகளோடு போராடி, தேர்தலிலோ, அரசியலிலோ வெற்றி பெற முடியாது. இதுதான் இன்றைய இந்தியாவின் எழுதப்படாத விதி. பணம், பணம், பணம் தான், பணம் மட்டும் தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சியாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை இந்திய அளவில் பிரபலமாக்கியவர் முன்னா