Posts

Showing posts from December, 2015

Important Bible Verses

விவிலிய வசனங்கள் 100 1.       என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! – திபா 119:105 2.  மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வார். மத். 4:4 3.         அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார். திபா 103:5 4.         உன் இளமை கழுகின் இளமையென புதிதாய்ப் பொலிவுறும். திபா 103:5 5.         தீயன செய்வோரே! என்னை விட்டு விலகுங்கள்; என் கடவுளின் கட்டளைகளை நான் கடைபிடிப்பேன். – திபா 119:115 6.         தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! -2 சாமு 7:28 7.         ஆண்டவரின் வாக்கு நேர்மையானது. அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்குரியவை!    - திபா 33:4 8.         உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை! – திபா 119: 103 9.         அஞ்சாதே! நான் உன்னோடு இருக்கிறேன், கலங்காதே! நான் உன் கடவுள்! – எசா. 41: 10 10.        உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:17 11.        நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளோர

Bp. Antony Pappusamy Felicitation Song

Image
வாழ்த்துப் பாடல் எங்கள் நல்லாயரே இனிய பண்பாளரே எங்கள் இல்லம் வந்துள்ள அன்புப் பேராயரே - 2 உம் புகழ் பாடுவோம் உம் வழி நாங்கள் செல்லுவோம் - 2 மாரம்பாடி ஈன்றெடுத்த மாணிக்கம் நீரே – மா மதுரைநகர் பெற்றுக் கொண்ட பாக்கியம் நீரே அன்புப் பணி செய்து வரும் ஆயரும் நீரே – எங்கள் அன்னைமரி புதல்வருக்கு சீடரும் நீரே கல்வியிலும் கலைகளிலும் கடவுள்பணி செய்வதிலும் கைதேர்ந்த ஆசான் நீரே - 2     வாழ்க வாழ்க எங்கள் அன்புப் பேராயரே     கிறிஸ்து இல்லம் வந்து ஆசீர்நல்கும் நல்லாயரே - 2 மனதுருகி செபிப்பதிலே வல்லவர் நீரே – என்றும் மக்கள் பணி செய்வதிலே நல்லவர் நீரே நல்லாயன் இயேசு வழி நடப்பவர் நீரே – எம்மை நல்வழியில் இன்றும் என்றும் நடத்துவீர் நீரே சாதனைகள் செய்திடவும் சோதனைகள் வென்றிடவும் வரம்படைத்த தீரரும் நீரே - 2     வாழ்க வாழ்க எங்கள் அன்புப் பேராயரே     கிறிஸ்து இல்லம் வந்து ஆசீர்நல்கும் நல்லாயரே - 2

Liturgy and Life

வாழ்வே வழிபாடாக… “ச்சே… என்னப்பா இந்தச் சாமியாரு…தினமும் ஒரே செபத்தையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு இருக்காரு. இத்தன வருஷம் படிச்சும் ஒழுங்கா செபம் பண்ணத் தெரியலையே. ஆனா அந்த பாஸ்டரு எவ்ளோ அழகா செபம் பண்றாரு!” – தாய்த்திரு அவை தன் பாரம்பரியத்தில் சிக்குண்டுக் கிடப்பதாகக் கருதும் ஒரு சிலரின் வாதம் இது.      “அடக் கொடுமையே! இந்தக் காலத்து சாமியாருங்க எல்லாம் என்ன பூசை வைக்கிறாங்க? அந்தக் காலத்து லத்தீன் பூசை இருக்கே. அதோட மகிமையை தனி”. – திருஅவை தன் பாரம்பரியத்தை இழந்துவிட்டதாக எண்ணும் வெகுசிலரின் வாதம் இது.      ஆராய்ந்து பார்க்கின், இவ்விரு கூற்றுகளுக்கும் அடிப்படையானதாக அமைவது இவர்கள் வாழ்வையும், வழிபாட்டையும் பிரித்துப் பார்ப்பதுதான் என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியும். வழிபாடு என்பது வெறும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே என எண்ணி, வாழ்விற்கும் வழிபாட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என எண்ணுவது உண்மையிலேயே தவறான ஒரு சித்தாந்தம் ஆகும். நமது வழிபாடுகள் அனைத்துமே நமது வாழ்வைத் தொடக் கூடியனவாக, நம் தான்மையை(சுயத்தை)த் தாக்குவனாவக, சொல்லளவில் உணர்த்தும் இறையாட

காக்கும் பூமியைக் காப்போம் (Save the Earth)

காக்கும் பூமியைக் காப்போம் (புவியைப் பாதுகாப்போம்) தொடக்கமாக…               “இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி                இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே” - என்று மனவேதனையுடன் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். உலகின் ஒருசில நாடுகளில் நிலவிய சாதிக்கொடுமையையேச் சகிக்க முடியாமல் பாரதிதாசன் இப்படிப் பாடிய போது, இன்று உலகம் முழுவதும் தவறென்று தெரிந்தும் தயங்காமல் நிகழ்த்தப்படும் இயற்கை அழிப்பைக் கண்ணுறும் போதெல்லாம் இப்படித்தான் வெகுண்டெழுந்து பாடத் தோன்றுகின்றது.                “இருட்டறையில் உள்ளதடா உலகம் - காக்கும்                 இயற்கையை அழிப்பவனும் இருக்கின்றானே” - ஆம். இயற்கையின் துணையின்றி நம்மால் இயல்வது ஒன்றுமில்லை என்பதை அறிந்தும் கூட, வாழும் புவியை வரைமுறையின்றி நாசம் செய்வது நமக்கு வாடிக்கையான செயலாகவே மாறிவிட்டது. ஆனால், புவியையும் புவியிலுள்ள அனைத்தையும் சீரழிப்பதை விட்டு, சீர்படுத்த முற்படும்போது தான் நாம் நமக்கும், நமக்குப் பின்வரும் சந்ததிக்கும் நல்லதைச் செய்பவர்களாக இருப்போம். இதை உணர்த்துவதும், அவ்வாறு பாதுகாக்க வழிமுறைகளைப் பரிந்துரைப்பதுமே இக்கட்