History of Our Parish Church
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து வடக்கே 4கி.மீ தொலைவில் அடைக்கலாபுரம் என்னும் கிராமம் உள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள “விழிதிறந்து நல்வழிகாட்டும் அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம்” தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஓர் கிறிஸ்தவ ஆலயம். மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான பழம்பெருமை கொண்ட இவ்வூர் “அற்புதநகர்” என்றும் வழங்கப்படுகின்றது. ஊரின் வரலாறு: சுமார் 1700-களில் பனைமரங்கள் அடர்த்தியாக இருந்த இவ்வூரில் ஏறத்தாழ 20 குடும்பங்கள் பனைத்தொழில் செய்து வந்தனர். அக்காலத்தில் பல ஊர்களில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, வடக்கன்குளம், பொத்தக்காலன்விளை, காயாமொழி, ஏரல், உடன்குடி போன்ற ஊர்களிலிருந்து பல குடும்பங்கள் இவ்வூரில் அடைக்கலம் புகத் தொடங்கினர். இவ்வாறு அண்டி வந்தோர்க்கு ஆதரவு அளித்ததால் “அடைக்கலாபுரம்” என்னும் பெயர் வழங்கலாயிற்று. இந்நிலையில், ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப்பின் 1854ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் அருகிலுள்ள ஆலந்தலை என்னும் கடற்கரை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகம் ஒன்று அங்குள்ள சூழ்நிலை குழந்தைகளுக்கு ஒத்து வராததால், அடைக்கலாபுரம் மக்களின் உடல் உழைப்