Posts

Showing posts from September, 2018

பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!! (A reading of the Book of Ruth in the Bible)

அது சாலமோன் அரசன் தாவீதுக்குப் பிறகு இஸ்ரயேல் மக்களை ஆண்டு கொண்டிருந்த காலம். யூதர்கள் தங்களைத் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதி பிற இனத்தவரைப் புழுவென மதித்த காலம். தாங்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய மக்களினம் என்றும், தங்களோடு வாழும் ஏனைய இனத்தார் யாருமே கடவுளுக்கு ஏற்றவர்களல்ல என்றும் எண்ணிக் கொண்டிருந்த காலம். இஸ்ரயேல் மக்களிலும் கூட பெண்கள் ஆண்களை விட மதிப்பில் குறைந்தவர்கள் என்று சித்தரிக்கப்பட்ட காலம். இந்தக்காலத்தில் தான் இஸ்ரயேல் மக்களுக்குத் தங்கள் திருச்சட்டத்தையும் மூதாதையர் வரலாற்றையும் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இறைவனும் மனிதனும் இணைந்து ஆசிரியர்களாகச் செயல்பட்டாலும் கூட, அக்கால மக்களின் ஆணாதிக்கச் சிந்தனைகள் இத்திருநூல்களிலும் இழையோட ஆரம்பித்தன.  பெண்களுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் எதுவும் மருந்துக்குக் கூட இல்லாத இந்தக் காலக்கட்டத்தில் தான் திருவிவிலியம் எழுதப்பட்டது என்றாலும் கூட, அரிதிலும் அரிதாக ஒருசில பெண்கள் அக்காலத்தவரால் சிறந்தவர்கள் எனக் கருதப்பட்டதும், அவர்களின் திருநூல்களில் தங்களுக்கென்று தனிச்சிறப்பான இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட

தனிநபர் வழிபாடும் தள்ளாடும் தமிழ்நாடும் (Hero Worship in Tamil Nadu Politics)

இந்திய, குறிப்பாக தமிழக அரசியலில் தனிநபர் வழிபாட்டிற்கு எப்போதும் பெரும் இடமுண்டு. ஆள்பவன் என்றாலே ஆண்டவன் என்று நினைக்கும் மனநிலை நம் மக்களின் பொதுப்புத்தியில் நங்கூரமிட்டு உட்கார்ந்திருக்கிறது. அது அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, திரைத்துறை, அரசுத்துறை என எல்லா இடங்களிலும் பரந்து விரிந்திருக்கின்றது என்றாலும், அரசியல் தளத்தில் அதன் ஆழமும் அகலமும் சற்றே அதிகம் தான். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திற்கு முன்பே இச்சீரழிவு இருக்கின்றது என்பது கசப்பான உண்மை. மன்னர் காலத்தில் மன்னர்களைப் பாடுவது, போற்றுவது, வழிபடுவது என்றிருந்த நிலை முடியாட்சி ஒழிந்து குடியாட்சி பிறந்த பிறகும் ஒழியவில்லை.  பூம்புகார் படத்திலே ஒரு வசனம் வரும். தன் கணவன் கோவலன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்கும் கண்ணகி பாண்டிய மன்னனைக் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கும் அதிகாரம் அவனுக்கு இல்லை என்றும் வாதிடுகிறாள். பின்னர் அமர்ந்திருக்கும் சான்றோர் பெருமக்களிடம் தன் வழக்கை எடுத்துரைக்கும் கண்ணகி, தன் வாதத்தின் இறுதியில் சொல்லும் வார்த்தைகள் அவை: “ஆன்றோர்களே, அருமைமிகு அளப்பரிய படை கொண்டவன் பாண்டியன் என்பதற