Posts

Showing posts from 2014

அம்மா என்றால் அன்பு (Mother means Love)

அம்மா என்றால் அன்பு பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம் இவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா? விலைமீது விலைவைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா   ஈரைந்து மாதங்கள் கருவாக எனைத்தாங்க நீீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் கொடுத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா?    இப்பாடல் வரிகளைக் கேட்காதவர்களோ, கேட்டு ரசிக்காதவர்களோ யாரும் இருக்க முடியாது. அப்படி யாரேனும் இருந்தால் கூட இப்பாடல் வரிகள் உணர்த்தும் மிகப்பெரும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. ஆம், தாய் என்னும் மாபெரும் உறவு இத்தரணியில் உருவெடுக்கும் உயிர்கள் அனைத்திற்குமே உண்டு. எத்தனை உறவுகள் எத்தனை வடிவங்களில் ஒருவனுக்கு வாய்த்தாலும் கூட, அனைத்திற்கும் அச்சாரமாக அமைவதும், அனைத்திலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைவது ஒரு தாய்க்கும் அவளது குழந்தைக்கும் இடையில் அமைந்த உறவே. ஏனெனில், எத்தனை உறவுகள் இருப்பினும் அத்தனை உறவுகளையும் அறிமுகப்படுத்துவதும், அடையாளப்படுத்துவதும் அந்தத் தாய் உறவாகத் தான் இருக்கும். எனவே தான், ஒரு குழந்தையின் முதல் உறவாக, முழுமையான உற...

செய்யும் தொழில் தெய்வம் அல்ல (Work is not Worship)

செய்யும் தொழில் தெய்வம் அல்ல “செய்யும் தொழிலே தெய்வம்“ - மாலை மயங்கும் வேளையில் திருச்செந்தூரில் ஒரு கடையின் முகப்பில் எழுதப்பட்டிருந்த இவ்வாசகத்தைக் கண்டதும் எனக்குள் ஓராயிரம் சந்தேகங்கள். அன்றாடம் ஏதேனும் ஒரு வகையில் கேட்டுக் கேட்டுப் பழகிப்போன வாசகம் தான் என்றாலும் அன்று மட்டும் ஏனோ இவ்வாசகம் புதிதாகத் தோன்றியது. தொழில் எப்படி தெய்வமாக முடியும்? எனக்குள் எழுந்த இக்கேள்விக்கு விடையளிக்க நீங்களாவது தயாரா?     “செய்யும் தொழிலே தெய்வம்“ என்னும் பழமொழியைக் கண்டுபிடித்து இவ்வுலகிற்குத் தந்தவர் சுவாமி விவேகானந்தர் என்றே நாம் பல வேளைகளில் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் ஆதிக்க வெறி அதிகம் கொண்ட பார்ப்பனீய சமூகமே இவ்வெட்டிப் பழமொழியின் உற்பத்தியாளர் என்பது புதிய, ஆனால் உண்மையான செய்தி. ஒருவேளை விவேகானந்தர் கூட பிராமணர்களின் பிரதிநிதியாகவே பெரும்பாலும் அடையாளம் காட்டப்படுவதால் இது அவரது மொழியாக வழங்கப்படுகிறதோ என்னும் ஐயப்பாடு எழுவதையும் மறுப்பதற்கில்லை. சரி, விஷயத்திற்கு வருவோம்.     கைபர்-போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து ஆடு மேய்ப்பவர்களாகத் தங்களை அறிம...