செய்யும் தொழில் தெய்வம் அல்ல (Work is not Worship)
செய்யும் தொழில் தெய்வம் அல்ல “செய்யும் தொழிலே தெய்வம்“ - மாலை மயங்கும் வேளையில் திருச்செந்தூரில் ஒரு கடையின் முகப்பில் எழுதப்பட்டிருந்த இவ்வாசகத்தைக் கண்டதும் எனக்குள் ஓராயிரம் சந்தேகங்கள். அன்றாடம் ஏதேனும் ஒரு வகையில் கேட்டுக் கேட்டுப் பழகிப்போன வாசகம் தான் என்றாலும் அன்று மட்டும் ஏனோ இவ்வாசகம் புதிதாகத் தோன்றியது. தொழில் எப்படி தெய்வமாக முடியும்? எனக்குள் எழுந்த இக்கேள்விக்கு விடையளிக்க நீங்களாவது தயாரா? “செய்யும் தொழிலே தெய்வம்“ என்னும் பழமொழியைக் கண்டுபிடித்து இவ்வுலகிற்குத் தந்தவர் சுவாமி விவேகானந்தர் என்றே நாம் பல வேளைகளில் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் ஆதிக்க வெறி அதிகம் கொண்ட பார்ப்பனீய சமூகமே இவ்வெட்டிப் பழமொழியின் உற்பத்தியாளர் என்பது புதிய, ஆனால் உண்மையான செய்தி. ஒருவேளை விவேகானந்தர் கூட பிராமணர்களின் பிரதிநிதியாகவே பெரும்பாலும் அடையாளம் காட்டப்படுவதால் இது அவரது மொழியாக வழங்கப்படுகிறதோ என்னும் ஐயப்பாடு எழுவதையும் மறுப்பதற்கில்லை. சரி, விஷயத்திற்கு வருவோம். கைபர்-போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து ஆடு மேய்ப்பவர்களாகத் தங்களை அறிமுகம் செய்து கொண்டவர